Wednesday, November 18

Tag: OhManapenne

ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் ஓ மணப்பெண்ணே !

ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் ஓ மணப்பெண்ணே !

News
ரோம் - காம் எனும் ரொமான்ஸ் காமெடி வகை படங்களுக்கு இளைஞர்கள் மற்றும் குடும்பங்களிடையே, எல்லாக் காலத்திலுமே, சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இந்த வகை படங்கள் ரொமான்ஸ், காமெடி மற்றும் உணர்வுப்பூர்வமான விஷயங்களால் எல்லைகள் கடந்து உலகம் முழுக்க அனைத்து வயதிலிருக்கும் மக்களையும் எளிதாக ஈர்த்து விடுகிறது. அந்த வகையில், தெலுங்கில் வெளியாகி பெரு வெற்றியடைந்த ரொமான்ஸ் காமெடி படமான  “பெல்லி சூப்புலு”  படம் தமிழில் ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் ரீமேக்காகிறது. இப்படத்தை A Studios சார்பில் தயாரிப்பாளர் கொனேரு சத்யநாரயணா, ரமேஷ் வர்மா பென்மட்ஷா மற்றும் A Havish Pictures இப்படத்தை தயாரிக்க, தயாரிப்பு பணிகளை  SP Cinemas மேற்கொள்கின்றனர்.  இப்படத்திற்கு தற்போது  “ஓ மணப்பெண்ணே” எனப் பெயரிடப்பட்டுள்ளது. தமிழக இளைஞர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் படமாக உருவாகி வரும் ...