ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த “ஓ மணப்பெண்ணே” திரைப்பட தயாரிப்பாளர்கள் !
A Studios LLP சார்பில் தயாரிப்பாளர் சத்யநாராயணா கொனேரு, ரமேஷ் வர்மா பென்மட்ஷா மற்றும் A Havish Productions இருவரும் நடிகர் ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடித்திருக்கும் “ஓ மணப்பெண்ணே” படத்திற்கு கிடைத்திருக்கும் அற்புதமான வரவேற்பில், மிகப்பெரும் உற்சாகத்தில் இருக்கின்றனர். Disney Plus Hotstar ல் வெளியான இத்திரைப்படம் உலகம் முழுதும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த வரவேற்பை கொண்டாடும் வகையில், படத்தை வெற்றிபெறச்செய்த ரசிகர்களுக்கு, தயாரிப்பாளர்கள் தங்களின் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தரமான கதைகளுக்கு எப்போதும் சிவப்பு கம்பள வரவேற்பு தரும், தமிழ் ரசிகர்களின் மீதான பெரும் நம்பிக்கையில், தங்கள் திரைப்பயணத்தை தமிழ் சினிமாவில் தொடர திட்டமிட்டுள்ளார்கள். மிக விரைவில் சில பெரிய திரைப்படங்களை தமிழில் அறிவிக்கவுள்ளார்கள். இத்தயாரிப்பு நிறுவனம் தெலுங்கில் ரவ...
