Friday, October 23

Tag: one way short film

தியாகராஜன் பாராட்டிய குறும்படம்!

தியாகராஜன் பாராட்டிய குறும்படம்!

News
சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த சினிமாக்காரர்களை கொரோனா முடக்கியுள்ள நிலையில் சத்தமில்லாமல் ஐந்து நிமிடம் ஓடக்கூடிய ஒரு குறும்படத்தை ‘செல்ஃபி’ முறையில் எடுத்துள்ளார் நடிகர் ஆதேஷ் பாலா. பழம்பெரும் நடிகர் ‘ஐசலக்கா’ சிவராமனின் வாரிசான இவர் ‘முண்டாசுப்பட்டி’, ‘சவரக்கத்தி’, ‘மரகதநாணயம்’, ‘மம்பட்டியான்’, ‘பேட்ட’ போன்ற படங்களில் திறமைகாட்டியவர். குறும்பட அனுபவத்தைப்பற்றி ஆதேஷ் பாலாவிடம் கேட்டோம். ‘‘இது குறும்பட சினிமாவிலேயே முதல் முயற்சி என்று சொல்லலாம். சிங்கிள் ஷாட்டாக ‘செல்ஃபி’ முறையில் எடுத்ததுதான் இந்த குறும்படத்தின் ஹைலைட். வாழ்க்கையில் எது நடந்தாலும் சோர்ந்துபோகாமல் எதிர்நீச்சல் போட்டு ஜெயிக்க வேண்டும் என்பதை இதில் அழுத்தமாகச் சொல்லியுள்ளேன். படத்தோட பெயர் ‘ஒன்வே’. இந்த குறும்படத்துக்கு இசை, எடிட்டிங் என்று தொழில்நுட்ப விஷயங்கள் அனைத்தையும் நானே என்னுடைய செல்போனிலேயே பண்ணினேன். ...