Friday, October 23

Tag: Ongaaram

இட ஒதுக்கீடு மற்றும் பெண்களின் பாதுகாப்பு ஆகியவற்றை மையப்படுத்திய திரைப்படம் ‘ஓங்காரம்’

இட ஒதுக்கீடு மற்றும் பெண்களின் பாதுகாப்பு ஆகியவற்றை மையப்படுத்திய திரைப்படம் ‘ஓங்காரம்’

News
''இன்றைய சூழலில் பெண்கள் உயர் கல்வி கற்பதற்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. தனியார் கல்லூரிகளில் கல்வி கற்கும் பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகிறார்கள். இதற்கு பொருளாதார நிலையை தகுதியாக நிர்ணயிக்காமல் சாதியை ஒரு தகுதியாக உறுதி செய்து வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு தான் காரணம். மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றால் சட்டத்தினைத் திருத்தம் செய்து, அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.'' என 'ஓங்காரம்' எனும் படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் அப்படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். 'அய்யன்', 'சேது பூமி 'ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஏஆர். கேந்திரன் முனியசாமி (AR. Kendiran Muniyasamy) இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ஓங்காரம்'(ONGAARAM). இதில் இயக்குநரான ஏஆர். கேந்திரன் முனியசாமி கதையின் நாயகனாக நடிக்க, கதாநாயகியாக நடிகை வர்ஷா விஸ்வநாத்(VARSHA VISWANATH) நடித்திர...