தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் புதிய தயாரிப்பு நிறுவனம் !
தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் புதிய தயாரிப்பு நிறுவனம் !
சினிமா மீதான தீராக்காதல், அர்ப்பணிப்பு, நல்ல கதைகளை உருவாக்க வேண்டுமென்கிற வேட்கையில், பல நல்ல தயாரிப்பாளர்கள், திரைத்துறையில் தயாரிப்பு நிறுவனங்களை துவங்கியுள்ளனர். தமிழ் சினிமாவில், அப்படியான அர்ப்பணிப்புடன் பல தயாரிப்பு நிறுவனங்கள் துவங்கி பெரும்பெயர் பெற்றிருக்கின்றன. அவை தமிழில் உலக அளவில் போற்றக்கூடிய, பல நல்ல படைப்புகளை தந்துள்ளன. அந்த வகையில் தமிழ் சினிமாவில் புதிய வரவாக, நல்ல திரைப்படங்களை தரவேண்டுமென்கிற கனவுடன், கால் பதித்திருக்கிறது ONSKY Technology PVT. LTD நிறுவனம். மிகப்பெரும் கனவுகளுடன் இந்நிறுவனத்தை துவங்கியுள்ளார் திரு. முத்து சம்பந்தம். ONSKY Technology PVT. LTD நிறுவனம் ஓரிரவில் உருப்பெற்றதல்ல, பல்லாண்டுகளாக DTH உலகில் தனது சேவையை வழங்கி வந்த இந்நிறுவனம், இப்போது திரைத்துறையிலும் தனது இனிய பயணத்தினை துவ...
