நகைச்சுவையும் திகிலும் கலந்த ‘ஓட்டம்’திரைப்படம்!
ரிக் கிரியேஷன் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேமாவதி ரவிஷங்கர் தயாரிக்கும் முதல் படம் ’ஓட்டம்’. மர்மங்களும் திகிலும் நிறைந்த இந்த படத்தில் இசையமைத்து கதாநாயகனாக அறிமுகமாகிறார் எஸ்.பிரதீப் வர்மா. இவருடன் ஐஸ்வர்யா சிந்தோஹி, அனுஸ்ரேயா கதாநாயகிகளாக அறிமுகமாக, வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் எஸ்.ரவிஷங்கர். இவர்களுடன் சாய்தீனா, அம்பானி சங்கர், நந்தகோபால், நிக்ஸிதா, ரெஜினி போன்றோர் நடித்துள்ளனர்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், ஒரு ஜமீன் பரம்பரையில் நடந்த சம்பவம் ஒன்றை மையமாக கொண்டு நடக்கும் கதையே ‘ஓட்டம்’ படத்தின் ஒன் லைன்.
இக்கதையில், காதலித்து கல்யாணம் செய்த மனைவி ஒரு பக்கம், தன்னைக் காப்பாற்ற சொல்லி தஞ்சமடைந்த ஒரு பெண் மறுபக்கம், என்று இருவரிடமும் மாட்டிக்கொண்டு தவிக்கும் கதாநாயகனின் நிலையை நகைச்சுவையும் திகிலும் கலந்து சொல்லப்பட்டிருப்பது படத்தை...
