Tuesday, October 27

Tag: Oru Oorla Oru Raja

கனியின் “ஒரு ஊர்ல ஒரு ராஜா” !

கனியின் “ஒரு ஊர்ல ஒரு ராஜா” !

News
இயக்குநர் திருவின் மனைவியும் தேசிய விருது வென்ற இயக்குநர் அகத்தியன் அவர்களின் மகளுமாகிய கனி தனது புத்தம் புது பயணத்தை “ஒரு ஊர்ல ஒரு ராஜா” நிகழ்ச்சி  மூலம் துவங்கியுள்ளார். சமீபத்தில் Yotube தளத்தில் Theatre D சேனலில்  வெளியாகியுள்ள “ஒரு ஊர்ல ஒரு ராஜா” எனும் இந்நிகழ்ச்சி வரலாற்றை  கதை சொல்லல் முறையில் சொல்வதில் புது அலையை உண்டாக்கி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்து, படத்தொகுப்பு செய்து தயாரித்துள்ளார் இயக்குநர் திரு. இந்தப் பயணம் எப்படி தொடங்கியது என கனியிடம் கேட்டபோது... எனது பால்ய காலத்திலிருந்தே வரலாறு எனக்கு மிகவும்  பிடித்த பாடம்.  வரலாற்றை மற்றவர்களுக்கு எடுத்து சொல்வதும் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அந்த வகையில் மிகப்பெரும் கூட்டத்திற்கு வரலாற்றை கதை வடிவில் சொல்ல முடியும் என்பது மிகப்பெரிய வாய்ப்பு. இப்படித்தான் இந்த ஐடி...