நிஜ வாழ்க்கையில் போலீஸ்… சினிமாவிலோ வில்லன்!
லத்தி படத்தில் வில்லனாக அதகளம் செய்திருக்கும் புதுமுகம் யார் என்ற கேள்வி படம் பார்ப்பவர்களிடம் தோன்றியிருக்கும். படத்தில் வில்லன் வேடம் ஏற்ற இவர் நிஜத்தில் ஒரு போலீஸ்காரர் என்பது நகை முரண்...
அவர் பெயர் P.N.சன்னி
கோட்டயம் கிழக்கு காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்த P.N.சன்னி சினிமா நடிகரானது சுபாரஸ்யமானது.
பத்ரன் இயக்கத்தில் மோகன்லால் நடித்து மாபெரும் வெற்றிப்பெற்ற படம் " ஸ்படிகம் " . இப்படத்தில் மோகன்லாலுக்கு சவால் விடும் பயில்வான் போன்ற உடல்வாகுள்ள நடிகரை தேடியிருக்கிறார் இயக்குனர். அந்த சமயத்தில் தான் அதில் முக்கிய வில்லனாக நடித்த ஜார்ஜ்,
அன்றைய மிஸ்டர் கேரளா பட்டத்தில் 2- ம் பரிசு பெற்ற போலீஸ் கான்ஸ்டபிள் சன்னியை பற்றி சொல்ல.. டைரக்டரின் ஒரே பார்வையில் ஓக்கே ஆனார் பெருச்சாளி பாஸ்டின் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக அசத்தி மலையாள மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்றார் அதன் பி...
