மக்களுக்கான கலையை முன்னெடுக்கும் இயக்குநர் பா.ரஞ்சித்!
கலை மக்களுக்கானது!
கலையை ஜனநாயகப்படுத்துவோம்!
கலை மக்களுக்கானது, அக்கலையை ஜனநாயகப்படுத்தும் முழு நோக்கத்தோடு நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுக்கும் மார்கழியில் மக்களிசை என்ற பெயரில் கலை நிகழ்ச்சியை சென்ற ஆண்டு நடத்தி வந்தது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு டிசம்பர் 18 -ஆம் தேதியன்று மதுரையிலும்,19 ஆம் தேதி கோவையிலும் மார்கழியில் மக்களிசை கலை நிகழ்ச்சியை நீலம் பண்பாட்டு மையம் தொடங்கியது. மதுரை மற்றும் கோவை மக்களின் பெறும் வரவேற்பை பெற்றது. அதன் மாபெரும் தொடர்ச்சியாக சென்னையில் 24 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. தற்போது சென்னையில் முதல் நாள் நிகழ்ச்சியாக வாணி மஹாலில் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக இயக்குனர் பா.ரஞ்சித் ,இசையமைப்பாளர் ஜி.வி .பிரகாஷ்,நாடாளுமன்ற உறுப்பினர் மு.கனிமொழி மற்றும் எழுத்தாளர் ஆதவன் தீட்சனியா ஆகியோர் பறை அடித்து விழாவை மகிழ்ச்சியாக தொடங்...
