” பற ” என்பது விடுதலையின் குறியீடு இயக்குனர் கீரா விளக்கம்
மனிதன் அதிகாரத்தை முன்னிறுத்தியும் தனது சாதி, மதம் ஆகியவற்றை முன்னிறுத்தியும் பிற மனிதனுக்கு அநீதி இழைத்ததினால் அதைக் கண்டு பொருமியும் பொங்கியும் எழுந்தது தான் சமூகநீதி என்ற கோசம். நம் தமிழ்சினிமாவில் சமூகநீதி பேசும் படங்கள் தற்போது அதிகமாக வரத்துவங்கியுள்ள நிலையில் ஒடுக்குமுறைகளை கேள்விகேட்டும், உளவியல் ரீதியான அடக்குமுறைகளை அம்பலப்படுத்தும் விதமாகவும், மேலும் விடுதலைக்கான விடியலை வேண்டியும் பற எனும் அட்டகாசமான படம் தயாராகி இருக்கிறது.
லெமுரியா மூவிஸ், V5 மீடியா, மற்றும் வர்ணலயா ஆகிய நிறுவனங்கள் வழங்கும் இப்படத்தை பெவின்ஸ்பால், விஜயா ராமச்சந்திரன், மூர்த்தி ஆகியோர் தயாரித்து இருக்கிறார்கள். இணைத் தயாரிப்பு s.p. முகில்.
இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. விமல்ராஜ், ஸ்ரீகாந்த் இசையில் சினேகன் எழுதிய உன்பேரை எழுதி வச்சேன் என்ற பாடல் யூட்யூபில...
