‘பரம்பொருள்’ படத்தின் பரப்பரப்பான டிரெய்லரை வெளியிட்ட மணிரத்னம், சுஹாசினி மணிரத்னம்!
கவி கிரியேஷன்ஸ் மனோஜ் & கிரிஷ் தயாரிப்பில் சி. அரவிந்த் ராஜ் இயக்கத்தில் சரத்குமார்-அமிதாஷ் நடிக்கும் 'பரம்பொருள்' டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு
*சிலைக் கடத்தல் பின்னணியில் அமைந்துள்ள 'பரம்பொருள்' படத்தின் பரப்பரப்பான டிரெய்லரை மணிரத்னம், சுஹாசினி மணிரத்னம் வெளியிட்டனர்*
*இப்படம் செப்டம்பர் 01 முதல் திரையரங்கில் வெளியாகிறது*
கவி கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பான 'பரம்பொருள்' திரைப்படத்தை இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள சி. அரவிந்த் ராஜ் எழுதி இயக்கியுள்ளார். மனோஜ் & கிரிஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் நடிகர் சரத்குமாரோடு இளம் நடிகர் அமிதாஷ் இணைந்துள்ளார். சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் இப்படத்தை வெளியிடுகிறார்.
சிலைக் கடத்தல் குற்றங்களின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. கதாநாயகியாக காஷ்மீரா பர்...
