Friday, October 23

Tag: Paranjit

பா.இரஞ்சித் முன்னெடுக்கும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி!

பா.இரஞ்சித் முன்னெடுக்கும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி!

News
பா.இரஞ்சித் முன்னெடுக்கும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி முக்கியமான ஒரு பண்பாட்டு முயற்சி -விஜய்சேதுபதி இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் மார்கழியில் மக்களிசை எனும் இசை நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் மார்கழிமாதத்தில் நடைபெற்றுவருகிறது. ஐந்தாவது வருடமாக 2024 ம் வருடத்திற்கான நிகழ்ச்சி டிசம்பர் 27, 28, 29 ஆகிய நாட்களில் சென்னை மைலாப்பூர் சாந்தோம் பள்ளியில் நடைபெற்றது. ஐநூறுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் மேடையேற்றப்படாத கலைஞர்கள் பலர் கலந்துகொண்டனர். பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் நிகழ்ச்சிக்கு வந்து கலந்துகொண்டனர். நிறைவு நாளில் நடிகர் விஜய்சேதுபதி கலந்துகொண்டு மக்களிசை மாமணி விருதுகளை கூத்து ஆசிரியர் செல்லமுத்து, ராஜாராணி ஆட்டக்கலைஞர் முப்பிலி இருவருக்கும் வழங்கினார். இது போன்ற மக்களிசை நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்கு...
பா. இரஞ்சித் தயாரிப்பில் ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

பா. இரஞ்சித் தயாரிப்பில் ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

News
பா. இரஞ்சித் தயாரிப்பில் ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது! இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிகர் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. ஜீவி பிரகாஷ், ஷிவானி ராஜசேகர், பசுபதி, ஸ்ரீநாத்பாஸி, லிங்கேஷ், விஷ்வாந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அகிரன் மோசஸ் இந்த படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது பா.இரஞ்சித் படப்பிடிப்பை துவக்கி வைத்தார். இயக்குனர் பா.இரஞ்சித் தன்னுடன் பணியாற்றிய உதவி இயக்குனர்களுக்காக தொடர்ந்து படங்கள் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தில் நடிப்பதோடு படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார் ஜீவி பிரகாஷ். படத்திற்கு ஒளிப்பதிவு- ரூபேஷ் சாஜி, படத்தொகுப்பு- செல்வா RK. கலை- ரகு, ச...
நாம் இணைந்து செயல்படவேண்டிய காலம் இது” ‘எருமை மறம்’ புத்தக வெளியீட்டு விழாவில் டாக்டர் தொல் திருமாவளவன்!

நாம் இணைந்து செயல்படவேண்டிய காலம் இது” ‘எருமை மறம்’ புத்தக வெளியீட்டு விழாவில் டாக்டர் தொல் திருமாவளவன்!

News
"நாம் இணைந்து செயல்படவேண்டிய காலம் இது" 'எருமை மறம்' புத்தக வெளியீட்டு விழாவில் டாக்டர் தொல் திருமாவளவன்! எழுத்தாளர், பாடலாசிரியர் மௌனன் யாத்ரிகா எழுதி நீலம் பதிப்பகம் வெளியிட்ட 'எருமை மறம்' கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று 23.02.2024 சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் நடைபெற்றது. நீலம் பதிப்பகத்தின் பொறுப்பாசிரியர் வாசுகி பாஸ்கரின் வரவேற்புரையோடு துவங்கிய இந்நிகழ்வை பேராசிரியர் அருந்தமிழ் யாழினி தொகுத்து வழங்கினார். இந்நூல் வெளியீட்டு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் நூலை வெளியிட இயக்குநரும் நீலம் பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளருமான பா. இரஞ்சித் பெற்றுக் கொண்டார். பொதுச் சமூகத்தில் எருமை மாட்டின் மீது கட்டப்பட்டுள்ள பிம்பத்தை மேற்கோள் காட்டி பேசத் துவங்கிய சிந்துவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் அவர்களது உரை சங்ககால தமிழ் இலக்கியத்தையும் சமகால அரச...