தமிழில் ராப் பாடலை தெறிக்கவிடும் ஜி.வி.பிரகாஷ் குமார்
தயாரிப்பாளர், படைப்பாளி, இசையமைப்பாளர் எல்லாவற்றையும் தாண்டி தொலைநோக்கு பார்வை கொண்ட இளைஞர் என்ற அடையாளம் கொண்ட தி ஏடிஜி (அஸ்வின் கணேஷ்) கைபா ஃபில்ம்ஸ் தயாரிக்கும் ட்ராப் சிட்டி படத்திற்கு இசையமைத்துள்ளார். சோனி மியூசிக்கின் தி ஆர்சர்ட் நிறுவனம் இசையை உலகமெங்கும் வெளியிடுகிறது. ட்ராப் சிட்டியின் பாடல்கள் ரசிகர்கள் மீது இசை சுனாமியாக இறங்கி ஆர்ப்பரிக்கச் செய்யும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இந்தப் படத்தில் லீட் சிங்கிளான 'பேரனாய்ட்' பாடலில் அட்லான்டாவைச் சேர்ந்த ராப் இசைப் பாடகி சா-ராக், ஆஸ்கர் விருது வென்ற நடிகரர் க்யூபா குட்டிங்கின் சகோதரர் ஒமர் குட்டிங், இந்தியாவிலிருந்து ஜி.வி.பிரகாஷ் குமார் என மூன்று கலைஞர்கள் இணைந்துள்ளனர்.
6 நிமிடங்களுக்கும் சற்று கூடுதலாக ஒலிக்கும் பேரனாய்ட், ட்ராப் சிட்டி படத்தின் முக்கியப் பாடல். ட்ராப் சிட்டி டீஸர் அண்மையில் வெளியானது. இத்திரைப்படம், கறுப...
