இயல்பான தோற்றத்தால் ரசிகர்களின் ஆர்வத்தை கவரும்நடிகை சங்கீதா கல்யாண் குமார்!
நடிகை சங்கீதா கல்யாண் குமார், வெளிவரவிருக்கும் ‘பராரி’ படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளார்!
‘பக்கத்து வீட்டு பெண்’ என்ற உணர்வை சில நடிகைகளே பார்வையாளர்களுக்கு தருவார்கள். இதில் நடிகை சங்கீதா கல்யாண் குமாரும் ஒருவர். சந்தானம் நடிப்பில் வெளியான ‘80ஸ் பில்டப்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் ராஜு முருகனின் தயாரிப்பில் எழில் பெரியவாடி இயக்கிய 'பராரி' படத்தில் தனது இயல்பான தோற்றத்தால் ரசிகர்களின் ஆர்வத்தை கவர்ந்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளிவர உள்ளது. டிரெய்லரில் அவரது அற்புதமான திரை இருப்பு, நடிப்பு ஆகியவை கவனம் ஈர்த்துள்ளது. படம் வெளியான பிறகு நிச்சயம் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெறுவார் என்பதில் சந்தேகம் இல்லை.
பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷனை பட்டப்படிப்பாக முடித்த இவர் திரைப்படங்கள் மற்றும் ஊடகங்கள் பற்றிய விசாலமான பார்வையைப் பெற்றிரு...
