காதலின் அழகிய தருணங்களை பேசும் ” பரிவர்த்தனை “
M.S.V. Productions சார்பில் பொறி. செந்திவேல் கதை வசனம் எழுதி தயாரித்துள்ள படம் பரிவர்த்தனை
இப்படத்தினை வெத்து வேட்டு, தி பெட், அகிய படங்களை தொடர்ந்து எஸ்.மணிபாரதி திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்:
வரும் செப்டம்பர் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தினை பற்றி இயக்குனர் மணிபாரதி கூறியதாவது. "காதல் எப்போது வரும் எவர்மீது வரும் என்பது இப்போதுவரை எவருக்குமே தெரியவில்லை அந்த மாயவலையில் சிக்கிக்கொண்டவர்களின் மனப்பிரவாகம்தான் " இப்பரிவர்த்தனை படம் என்றார்.
மேலும் அவர் கூறும்போது நம் வாழ்வின் ஆகச்சிறந்த தருணங்கள் எதுவென்றால் அது காதல் காலங்கள்தான். அந்த அழகிய தருணங்களை அதன் இயல்புகளோடவே படமாக்கியிருக்கிறோம் என்றார்.
அத்தோடு கடந்த சில வருடங்களாக சாதிய வன்மங்களையும், போதை பழக்கவழக்கங்களை மட்டுமே பேசி கொண்டிருக்கும் தமிழ் திரைப்படத்திற்கு மத்தியில் காதலையும் காதல் சார்ந்து...
