ரியாலிட்டி ஷோ வின்னரான பருத்திவீரன் சுஜாதா !
ரியாலிட்டி ஷோ வின்னரான பருத்திவீரன் சுஜாதா !
திரைப்படங்களில் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்துப் புகழ் பெற்ற பருத்திவீரன் சுஜாதா, தற்போது சன் டிவியின் புதிய ரியாலிட்டி ஷோவான 'டாப் குக் டூப் குக் ' நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் வென்று டைட்டில் வின்னர் ஆகியிருக்கிறார்.
ஆரம்பத்தில் ஓரிரு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொண்டிருந்த பருத்திவீரன் சுஜாதா முதல் முறையாக பங்குபெற்ற முழுநீள பெரிய ரியாலிட்டி ஷோ இதுதான். அதில் நடக்கும் சமையல் போட்டியில் ஆரம்பத்தில் இவர் எளிதாக வைத்த பூசணிக்காய் சாம்பாருக்காக விமர்சிக்கப்பட்டார். ஆனால் இப்போது அவரே டைட்டில் வின்னராகி இருப்பதுதான் ஆச்சரியம்.
அவரிடம் பேசியபோது :
சினிமாவில் இருந்து டிவி வந்து ,இந்த ஷோவில் கடந்து வந்த பாதை எப்படி உள்ளது?
நான் மதுரையில் இருந்து கொண்டு தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறேன். இயக்குநர்கள் தயா...

