‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
ஸ்டுடியோ கிரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் 'பத்து தல' திரைப்படம் இந்த மாதம் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதையொட்டி இதன் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று (18.03.2023) நடைபெற்றது.
நிகழ்ச்சியில் படத்தின் ட்ரைய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வெளியிடப்பட்டது. மேடையில் படத்தின் பாடல்கள் குறித்தும் இதன் அனுபவம் பற்றியும் ரஹ்மான் பகிர்ந்து கொண்டதாவது, "'பத்து துல' படம் நான் ஒத்துக் கொண்டதற்கு முதல் காரணம் என் தம்பி சிலம்பரசன். அதன் பிறகு இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா. அவருக்கு மிகச் சிறந்த இசை அறிவு இருக்கிறது. என்னுடைய சினிமா பயணத்தில் மிகச்சிறந்த பாடல்களில் ஒன்றாக 'முன்பே வா என் அன்பே வா' பாடலை குறிப்பிடுவ...

