உலக சினிமா வரலாற்றில் முதன்முறையாக நடிகர்களே இல்லாமல் ஒரு படம் உருவாக இருக்கிறது!
உலக சினிமா வரலாற்றில் முதன்முறையாக நடிகர்களே இல்லாமல் ஒரு படம் உருவாகிறது!
பலராலும் பாராட்டப்பட்ட 'ஓநாய்கள் ஜாக்கிரதை' படத்தை இயக்கிய பட்டாபிராமன் (விபிஆர்) இயக்கி, தயாரித்து, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகும் இப்படத்தின் தலைப்பு விரைவில் வெளியாக உள்ளது.
குறும்படப் பின்னணியில் இருந்து வந்த விபிஆர் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியதில்லை. இவர் இதற்கு முன்பு இயக்கிய 'ஓநாய்கள் ஜாக்கிரதை' திரைப்படம் விமர்சன ரீதியாகப் பாராட்டு பெற்றது.
தனது புதிய படத்தின் கதைக்களம் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்றும் இந்த புதிய முயற்சி அனைவரின் கவனத்தை ஈர்க்கும் என்றும் இயக்குநர் விபிஆர் கூறினார்.
"இப்படத்தின் கதைக்கு நடிகர்கள் தேவையில்லை, காட்சியமைப்பு மற்றும் திரைக்கதை மட்டுமே பார்வையாளர்களை ஈர்க்கப் போதுமானதாக இருக்கும். அனைவரையும் ரசிக்க வைக்கும் நோக்கத்தில் உருவாகும் இந்தப் ப...
