“பட்டாஸ்” படத்தின் “ஜிகிடி கில்லாடி” சிங்கிள் பாடல்!
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “பட்டாஸ்” படம் அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் பாடல்கள் மூலம் கொண்டாட்ட அதிர்வலைகளை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. முதல் சிங்கிளான “ஜில் ப்ரோ” மற்றும் இரண்டாவதாக வெளியான “மொரட்டு தமிழன்டா” இரண்டும் பெரு வெற்றி பெற்ற நிலையில் இப்போது மூன்றாவதாக அனிருத் குரலில் வெளியாகியிருக்கும் “ஜிகிடி கில்லாடி” சிங்கிள் பாடல் ஒரே இரவில் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனங்களை கவர்ந்திழுத்து பெரு வெற்றியடைந்துள்ளது. “பட்டாஸ்” படத்தின் மூன்று பாடல்களும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக மாறியது இசையமைப்பாளர்களான விவேக், மெர்வின் குழுவை இன்பத்தின் உச்சிக்கு அழைத்து சென்றிருக்கிறது. மேலும் அவர்களது நெருங்கிய நண்பரான அனிருத்துடன் இணைந்து இப்பாடல் உருவாகியிருப்பது, அவர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
அனிருத்துடன் இணைந்து பணியாற்றியது குறித்து இசையமைப்ப...


