’திட்டம் இரண்டு’ படம் மூலம் கிடைத்த பாராட்டு! – உற்சாகத்தில் நடிகர் பாவல் நவகீதன்
எந்த கதாபாத்திரம் என்றாலும் அதில் கச்சிதமாக பொருந்தும் நடிகர்களில் பாவல் நவகீதனும் ஒருவர். ’மெட்ராஸ்’ படத்தில் விஜி
என்ற கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர், ‘குற்றம் கடிதல்’ படத்தில் வில்லத்தனம் கலந்த குணச்சித்திர வேடத்தில்
மிரட்டினார். அப்படங்களை தொடர்ந்து ‘மகளிர் மட்டும்’ படத்தில் தமிழ் பேசும் வட இந்திய வாலிபராக நடித்து பாராட்டு பெற்றார்.
இப்படி எந்த ஒரு வேடமாக இருந்தாலும், தனது நடிப்பு மூலம், அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடும் நடிகரான பாவல் நவகீதன்,
அடிப்படையில் இயக்குநர் என்றாலும், அவருக்குள் இருக்கும் நடிப்பு திறமையால் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத
நடிகராகியுள்ளார்.
’வட சென்னை’, ‘பேரன்பு’ ஆகிய படங்களுக்குப் பிறகு தனது கனவான படம் இயக்குவதில் பாவல் நவகீதன் கவனம் செலுத்தி, ஒரு
படத்தை இயக்கினாலும், நடிகர் பாவல் நவகீதனை தமிழ் சினிமா விடுவதாக இல்லை. எனவே, ‘வலிமை’, ‘பூமிகா’...


