‘ பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே ‘திரைப்பட விமர்சனம்
ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ' பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே ''
சின்னத்திரையில் பிரபலமான ராஜ்கமல், ஸ்வேதா பண்டிட் ,மது, ஜெயச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ப்ளே பாயாக சுற்றி திரியும் அரவிந்த் சமூக ஊடகங்களில் நட்பாகும் பெண்களுக்கு வலைவீசுவான். காதலிப்பது போல் நடித்து அவர்களை அந்தரங்கப் புகைப்படங்கள் எடுத்துமிரட்டி அவர்கள் மூலமே காசு பார்ப்பான். அல்லது விற்று இணைய வெளியில் வெளியிடச் செய்து பணம் சம்பாதிப்பான். இதுவே தனது போக்கு என இருப்பவன்.
அவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் வெளியே தெரிந்தால் அவமானம் என்று யாரிடமும் சொல்லாமல் தனக்குள்ளேயே புழுங்கிக் கொண்டு இருப்பதுண்டு.
அப்படி ஒருத்தி அவனை நம்பியவள் தற்கொலை செய்து கொள்கிறாள்.
போலீஸ் பிடியில் அந்தப்புகார் செல்கிறது. போலீசார் துப்புத் துலக்க ஆரம்பிக்கிறார்கள்.
நந்...
