இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் கிளாப் அடித்து துவக்கி வைத்த ’பேராசை’ படப்பிடிப்பு!
மக்களின் பேவரைட் தொலைக்காட்சி தொடர்களில் ஒன்றான ‘யாரடி நீ மோஹினி’ தொடர் மூலம் மக்களிடம் பிரபலமானவர் ஸ்ரீ, பல
தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததோடு, பல திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். சினிமாத்துறையில் பல
வருட போராட்டங்களுக்குப் பிறகு சின்னத்திரை உலகில் தனக்கான தனி இடத்தை பிடித்திருப்பவர் தற்போது ‘பேராசை’ என்ற
திரைப்படம் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
சினிமாவுக்காக பல வருடங்கள் போராடி வெற்றி பெற்ற ஸ்ரீ, நினைத்திருந்தால் ரொம்ப எளிதாக சினிமாவுக்குள் ஹீரோவாக
நுழைந்திருக்கலாம். காரணம், அவருடைய பின்னணி அப்படிப்பட்டது. ஆம், 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் சங்கர்
கணேஷின் மகன் மற்றும் எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிப் படங்களை தயாரித்த பழம்பெரும்
தயாரிப்பாளர் ஜி.எல்.வேலுமணியின் பேரன் என்ற அடையாளம் இருந்தும், அவ...
