மகேஷ் நாராயணன் இயக்கும் ‘Phantom Hospital’
பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் ப்ரீதி ஷஹானி, Talvar, Raazi
மற்றும் Badhaai Ho போன்ற படங்களை தந்தவர், தற்போது விருது பெற்ற புலனாய்வு பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் ஜோசி ஜோசப்,
இந்திய சுகாதார அமைப்பை கேள்விக்குள்ளாக்கும், பெரும் விசாரணையை மேற்கொண்டதை அடிப்படையாக வைத்து, அவருடன் இணைந்து முற்றிலும் வித்தியாசமான களத்தில், புதியவகை திரைப்படத்தை தரவுள்ளார். இத்திரைப்படம் மலையாளத் திரையுலகில் புகழ் பெற்ற இயக்குநர் மகேஷ் நாராயணன், இந்தியில் இயக்கும் முதல் திரைப்படமாக உருவாகிறது.
இத்திரைப்படம் தயாரிப்பாளர் ப்ரீதி ஷஹானி உடைய புதிய நிறுவனமான 'Tusk Tale Films' உடைய அறிமுக படைப்பாக உருவாகிறது. இந்நிறுவனத்தை அறிமுகப்படுத்திய ப்ரீதி ஷஹானி, இந்நிறுவனம் வியத்தகு கதைகளை, இந்திய மக்களின் பிர்சசனைகளை, அதன் வேர்களை ஆராய்ந்து சொல்லும் படைப்புகளை உருவாக்குவதை குறிக்கோளாக கொண்டு இயக்கும் என்றார்.
Pha...
