Friday, October 23

Tag: Pichaikkaran2

விஜய் ஆன்டனியின் ‘பிச்சைக்காரன் 2’!

விஜய் ஆன்டனியின் ‘பிச்சைக்காரன் 2’!

News
நடிகர் விஜய் ஆன்டனியின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக 'பிச்சைக்காரன் 2' படத்தின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு இப்போது வெளியாகியிருக்கிறது. 'பாரம்' படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி இயக்கும் இப்படம், விஜய் ஆன்டனி பிலிம் கார்ப்பரேஷன் மற்றும் விஜய் ஆன்டனி பிலிம்ஸின் பத்தாவது தயாரிப்பாகும். இது குறித்த செய்தியைப் பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆன்டனி, "எங்களது மற்றுமொரு கனவுப் படமான பிச்சைக்காரன் 2 படம் குறித்து அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். 'பிச்சைக்காரன்' படத்துக்காக இயக்குநர் சசி அவர்களுக்குத்தான் நான் முதலில் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். காரணம், என்றென்றும் மறக்க முடியாத வெற்றிப்படமாக எங்கள் நிறுவனத்துக்கு அமைந்த படம் 'பிச்சைக்காரன்'. சசி அந்தப் படத்துக்காக மிகச் சிறப்பாகப் பணியாற்றி மகத்தான வெற்றியை ஈட்டித் தந்ததுதான், இப்ப...