Thursday, October 29

Tag: Pisasu 2

மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு 2’ படப்பிடிப்பு நிறைவு!

மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு 2’ படப்பிடிப்பு நிறைவு!

News
ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் ‘பிசாசு 2’ திரைப்படத்தை வெற்றி இயக்குனர் மிஷ்கின் இயக்குகின்றார். கதையின் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்க உடன் பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். திண்டுக்கல்லில் 3 கட்டமாக நடைபெற்ற ‘பிசாசு 2’ படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்தது. படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து இயக்குனர் மிஷ்கின் அனைவரின் ஒத்துழைப்பிற்கு தனது அன்பை தெரிவித்து வாழ்த்துக்களை கூறினார். பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்க சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். திரையரங்குகளில் ‘பிசாசு 2’ வெளியாகும் என்று கூறிய தயாரிப்பு தரப்பு விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு தேதி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளது....
கார்த்திக் ராஜா இசையில் “பிசாசு 2”!

கார்த்திக் ராஜா இசையில் “பிசாசு 2”!

News
மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா ஜெர்மீயா நடிக்க, ராக்ஃபோர்ட் எண்டர்ட்யின்மெண்ட் பெருமையுடன் வழங்கும் “பிசாசு 2” படத்திற்கு இசையமைக்கிறார் கார்த்திக் ராஜா ! மிஷ்கின் படங்களில் இசை தனித்து தெரியும். இசையின் வலிமை வெகு அழகாக படத்துடன் பொருந்தி இருக்கும். இசையை படத்திலிருந்து தனித்து பிரிக்க முடியாது. அவரது படங்களின் இசை, எப்போதும் ரசிகர்களை பிரமிக்க செய்வதாகவே இருக்கும். மிஷ்கின் படங்களில் இசை ஒரு முக்கிய கதாப்பாத்திரம் போன்றே இருக்கும். உண்மையில் இது தான் அவரது படங்களில் பாடல்கள் மெகா ஹிட் ஆவதற்கான காரணமாகும். தற்போது ஆண்ட்ரியா ஜெர்மீயா நடிக்க, மிஷ்கின் இயக்கும் "பிசாசு 2" படத்தில் நேர்த்தியான, தேர்ந்த இசையை தொடர்ந்து தந்து வரும் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவுடன் அவர் இணைந்திருக்கிறார். படத்தின் இசைக்கோர்ப்பு வேலைகள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்ட நிலையில், மிஷ்கின் அதனை, மிகவும் மகிழ்ச்சியான அ...