அபி ஹாசன் முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘பீட்சா-4’!
எஸ். தங்கராஜின் தங்கம் சினிமாஸ் மற்றும் சி.வி. குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் அபி ஹாசன் முதன்மை வேடத்தில் நடிக்கும் 'பீட்சா-4'!
*திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இணையும் 'பீட்சா-4' படப்பிடிப்பு ஜனவரியில் ஆரம்பம்*
தமிழ் திரையுலகில் திகில் திரைப்படங்களுக்கான புதிய டிரெண்டை ஏற்படுத்தி தக்க வைத்துள்ள 'பீட்சா' வரிசையின் முதல் மூன்று பாகங்களின் ஹாட்ரிக் வெற்றியை தொடர்ந்து அதன் நான்காம் பாகமான 'பீட்சா 4' படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது.
எஸ். தங்கராஜின் தங்கம் சினிமாஸ் மற்றும் சி.வி. குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கவுள்ள இத்திரைப்படத்தில் பிரபல நடிகர் நாசரின் மகனும் 'கடாரம் கொண்டான்' மற்றும் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' உள்ளிட்ட படங்களில் நடித்தவருமான அபி ஹாசன் முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.
இது குறித்து பேசிய தயார...
