Tuesday, September 22

Tag: Plan Panni Pannannum

100 சதவீதம் காமெடி சரவெடி திரைப்படம் “பிளான் பண்ணி பண்ணனும்”!

100 சதவீதம் காமெடி சரவெடி திரைப்படம் “பிளான் பண்ணி பண்ணனும்”!

News
Positive Print Studios சார்பில் L சிந்தன் மற்றும் ராஜேஷ்குமார் தயாரிப்பில், ரியோ ராஜ் மற்றும் ரம்யா நம்பீசன் நடிப்பில் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கும், ரொமாண்டிக் காமெடி திரைப்படம் “பிளான் பண்ணி பண்ணனும்”. 2021 செப்டம்பர் 24 முதல் உலகமெங்கும் இத்திரைப்படம் வெளியாவதை ஒட்டி, படக்குழு அனைவரும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் இந்நிகழ்வில்... நடிகர் ரியோ ராஜ் கூறியதாவது... நடிகர்கள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இப்படத்தில் மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் பணியாற்றினோம். எனது படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பது, எனது கனவுகளில் ஒன்று, அது இப்போது நனவாகியிருக்கிறது. கோவிட் தடங்கல்கள் எத்தனை வந்தாலும் அந்த இன்னல்களை தாண்டி, இத்திரைப்படம் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். இந்த பொதுமுடக்கம் நம் மீது பெரும் அழுத்தங்களையும், சோகங்களையும் தந்தது. அ...