அப்புகுட்டி நடிக்கும் “பிறந்த நாள் வாழ்த்துகள்”!
பொங்கல் வாழ்த்துகளுடன் திரை
வெளியீட்டை அறிவித்த “பிறந்த நாள் வாழ்த்துகள்” படக்குழு !!
Plan3 Studios சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துகள்”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், வரும் பிப்ரவரி மாதம் திரைக்கு வரவுள்ளது. Mathens Group இப்படத்தினை இணைந்து வழங்குகிறது.
பொங்கல் வாழ்த்துக்களுடன், பிப்ரவரி திரை வெளியீடு குறித்த, அறிவிப்பு போஸ்டரை, தயாரிப்பு குழுவினர் வெளியிட்டுள்ளனர். கிராமத்து வீட்டுப் பிண்ணணியில், அன்பான விலங்குகளுடன், கர்பிணி மனைவியை அணைத்தபடி, அப்புகுட்டி இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
கிராமத்துப் பின்னணியில் அழுத்தமான சமூகம் கருத்துடன், வித்தியாசமான ஃபேண்...
