Saturday, October 24

Tag: playback singer p suseela

பின்னணிப்பாடகி சுசீலாவுக்கு பாராட்டு விழா!

பின்னணிப்பாடகி சுசீலாவுக்கு பாராட்டு விழா!

News
தேன் சிந்தும் குரலால் வான் எட்டும் புகழைப் பெற்ற கானகுயில் பாடகி சுசீலா. தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்மொழியில்தான் அவர் உயிர்க்குரல் உயரம் தொட்டது. இன்று சிட்டுக்குருவிகள் அழிந்து போனாலும் அவர் பாடிய 'சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து' பாடலும் பாடலில் அவர் காட்டிய மேஜிக் குரலும் ஒருக்காலும் அழியாது. 1953 -ல் “பெற்றதாய்” படத்தில் பாடகியாக அறிமுகமான அவர் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, தமிழுக்கு அமுதென்று பேர் போன்ற மறக்க முடியாத பாடல்கள் உள்பட இந்திய மொழிகளில் மொத்தம் 25,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அவர் பாடிய பாடல்களுக்கான அங்கீகாரமாக பத்மபூசன் விருதை வழங்கியுள்ளது மத்திய அரசு. மேலும் 5 முறை தேசியவிருதுகளையும், 11 மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். தென்னிந்திய மொழிகளில் அதிக பாடல்கள் பாடி கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.சினிமாவிற்கு வந்து 65 வருடங்...