பொன் மாணிக்கவேல் – விமர்சனம்
பொன் மாணிக்கவேல் - விமர்சனம்
நிஜத்தில் வாழும் நேர்மையான போலீஸ் அதிகாரியின் பெயரில் வந்திருக்கும்
கற்பனைக் கதைதான் பொன் மாணிக்கவேல்.
நீதிபதி ஒருவர் சுட்டுக்கொல்லப்படுகிறார். அவரது தலையையும் கொலைகாரர்கள்
வெட்டி எடுத்துச் சென்று விடுகின்றனர். இந்தக் கொலையை துப்புத் துலக்கி
கொலையாளியைக் கண்டுபிடிக்க, ஏற்கெனவே காவல் துறையில் பணியாற்றி பின்னர்
வேலையை விட்டுச் சென்ற பிரபுதேவா சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்.
பிரபுதேவா விசாரணை நடக்கும்போதே வழக்கில் தொடர்புடைய மற்றொரு போலீஸ் இன்ஸ்பெக்டர் குண்டு வெடிப்பின் மூலம் கொல்லப்படுகிறார்.
அடுத்ததாக தொழிலதிபர் சுரேஷ் மேனன் கொல்லப்பட இருப்பதாக கணிக்கும்
பிரபுதேவா அவருக்கு பாதுகாப்பு கொடுக்க முன் வருகிறார். சுரேஷ் மேனன்
கொல்லப்பட்டரா....நீிதிபதியைக் கொன்றது யார் எதற்ககா கொலைகள் நடக்கின்றன
என்ற மர்ம முடிச்சுகள் இறுதிப்பகுதியி்ல...
