இன்னும் 6 நாள்களில் “பொன்னியின் செல்வன்”!
"பொன்னியின் செல்வன்"!பட சம்பந்த பட்டவர்கள்.. சம்பந்தபடாத திரை உலக பிரமாக்கள்.. தமிழ் சினிமா உலகம்.. உலக சினிமா ரசிகர்கள்.. கதை படித்தவர்கள்.. படிக்காதவர்கள்.. கதை படித்துக் கொண்டிருப்பவர்கள்.. விமர்சனம் எழுத நினைப்பவர்கள்.. முதல் ஷோவை பார்த்து எழுத துடிப்பவர்கள்..
எல்லோரும்
மணி ரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்" பார்க்க ஆவலோடு இருப்பது ஒரு வரலாற்று நினைவு.. சந்தோசம்.
நமக்கே பார்க்க ஆவல் இருந்தால்.. கல்கியின் பொன்னியின் செல்வனை,
மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வனாக உருவாக்கியவருக்கு தான் எத்தனை ஆவல் இருக்கும்.
அவரின் உரையாடலில் இருந்து சில..
கல்கியின் காவியத்தை கண் முன்னால் கொண்டு வருகிற சவால் அசைன்மென்ட்.
கதை, களம், வரலாறு, சமூகம், அரசியல் என கதை நடக்கும் காலக்கட்டத்திற்கே அழைத்துச் செல்ல வேண்டும்.
அதில் வருகிற காட்சிகள், பிரம்மாண்டம், அட்வென்சர் எல்லாம் ஸ்கூல் படிக்கும்போது ப...
