விஜய் தேவரகொண்டா- பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஜேஜிஎம்’ படப்பிடிப்பு தொடக்கம்!
பூரி கனெக்ட்ஸ் மற்றும் ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் 'ஜேஜிஎம்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. இதில் நடிகர் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
தெலுங்கு திரை உலகின் பாதையை திசை திருப்பிய படைப்பாளிகளில் முக்கியமானவரான இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் 'ஜேஜிஎம்'. பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்திய அளவிலான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் 'ஜேஜிஎம்' படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஆக்சன் டிராமா ஜானரில் தயாராகிறது.
இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் கனவுப் படைப்பான 'ஜேஜிஎம்' திரைப்படத்தை அவருடைய சொந்த பட நிற...




