நாம் மறந்துபோன நேதாஜியை நினைவுபடுத்தும் ‘போர்குடி’ படக்குழு!
நடிகர் ஆர். எஸ். கார்த்திக் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'போர்குடி' படத்தில் இடம்பெற்றிருக்கும் 'வீச்சருவா வீசி வந்தோம்..' எனத் தொடங்கும் பாடலுக்கான வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு அர்ப்பணிக்கும் வகையில் இந்த பாடல் உருவாக்கப்பட்டிருப்பதாக பட குழுவினர் பெருமிதத்துடன் தெரிவித்திருக்கின்றனர்.
11 வில்லேஜர்ஸ் ஃபிலிம் புரொடக்ஷன் மற்றும் யாதவ் பிலிம் புரொடக்ஷன் எனும் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆர். தியாகு, ரோல்ஸ்டன் கருப்பசாமி, சரவணன் குப்புசாமி மற்றும் எஸ். எஸ். நந்தகுமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் 'போர்குடி'. இதில் ஆர். எஸ். கார்த்திக் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஆராத்யா நடித்திருக்கிறார். இவர்களுடன் சங்கர் தாஸ், அருண்மொழி தேவன், மனோஜ் கண்ணன், செந்தில்...
