“ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான் “ படத்தின் போஸ்டர், ராமர் கோவில் திறப்பு விழா நாளில் வெளியிடப்பட்டது!
*“ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான் - ஒரு சொல்லப்படாத காவியம்!! “ திரைப்படத்தின் போஸ்டர், ராமர் கோவில் திறப்பு விழா நாளில் வெளியிடப்பட்டது!!*
இப்படத்தின் வசீகரிக்கமிக்க போஸ்டரை, சுரேஷ் ஆர்ட்ஸ் நிறுவனம், அயோத்தியின் வரலாற்று நிகழ்வையொட்டி, வெளியிட்டது.
சுரேஷ் ஆர்ட்ஸ் நிறுவனம் அதன் தயாரிப்பில், உருவாகும் மகத்தான படைப்பான "ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான்" திரைப்படத்தின் புதுமையான போஸ்டரை, அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின் புனித நாளில், பெருமையுடன் வெளியிட்டுள்ளது. கன்னடம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வரவிருக்கும் இந்தத் திரைப்படம், மதிப்புமிக்க ராமாயணத்தின் சொல்லப்படாத அம்சங்களை கூறுவதோடு, காவியக் கதையின் தனித்துவமான கண்ணோட்டத்தை வழங்கும்.
ராமர் கோயில் திறப்பு விழாவினையொட்டி வெளியிடப்பட்டுள்ள கவர்ச்சிகரமான போஸ்டர், அயோத்தியில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்களை எதிரொ...
