340 இசை நிறுவனங்களின் 30 லட்சத்துக்கும் அதிகமான பாடல்களுக்கான உரிமையைப் பெற்ற ஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடட்!
ஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடட் (PPL) இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனம். சரேகமா, டைம்ஸ் மியூஸிக், சோனி மியூசிக், டி சீரிஸ், யூனிவர்ஸல் மியூசிக், வீனஸ் உள்ளிட்ட 340க்கும் அதிகமான இசை நிறுவனங்களின் 30 லட்சத்துக்கும் அதிகமான சர்வதேச மற்றும் உள்நாட்டுப் பாடல்களை, பொது நிகழ்ச்சிகளில் ஒலிபரப்ப / ஒலிப்பதிவு உரிமையையும், வானொலி ஒலிபரப்பு உரிமையையும், அதற்கான கட்டணத்தை வசூலிக்கும் உரிமையையும் பெற்றுள்ளது.
ஒவ்வொரு வருடமும், திரைத்துறை மட்டும் நூற்றுக்கணக்கான பாடல்களைத் தயாரிக்கிறது. அதில் பல பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக நிலைக்கிறது. இன்று இந்திய இசை நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால் அவர்களின் அறிவுசார் சொத்துக்கு ரசிகர்கள் இல்லை என்பது கிடையாது. அந்த சவால், பெரும்பாலான இந்தியர்களுக்கு தாங்கள் ரசிக்கும் இசைக்கான பணத்தைத் தர வேண்டும் ...
