Friday, October 23

Tag: prabhaas

பான் இந்திய சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் பிரபாஸ் !

பான் இந்திய சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் பிரபாஸ் !

News
பாகுபலி முதல் கல்கி வரை: உண்மையிலேயே மிகப்பெரிய பான் இந்திய சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் ரெபெல் ஸ்டார் பிரபாஸ் ! கல்கி கி.பி 2898 இல் நடித்த இந்தியாவின் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், பிரபாஸை 'கடவுளுக்கு நிகரானவர்' என்று அழைத்தது, ​​​​ பிரபாஸுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாகும். சமீபமாக பிரபாஸின் அபரிமிதமான புகழ் பிராந்திய எல்லைகளைக் கடந்து இந்தியா முழுமைக்குமான ஒரு மறுக்க முடியாத சூப்பர்ஸ்டாராக மாற்றியுள்ளது. படமோ தலைப்போ பிரமாண்டமோ, எதுவும் முக்கியமில்லை, பிரபாஸ் எனும் வெறும் பெயர் மட்டுமே திரையரங்கிற்குக் கூட்டம் கூட்டமாக ரசிகர்களைக் குவிக்கிறது. மிகக்குறைந்த பப்ளிசிட்டியுடன் அதிக கூட்டத்தை வரவழைக்கும் பிரபாஸின் திறமை, அவரது நட்சத்திர பலத்திற்குச் சான்றாகும். சமீபத்தில் அவர் நடித்த "கல்கி" திரைப்படம் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். ஒரே ஒரு விளம்பர நிகழ்வில் பங்கேற்ற போதிலும், திரைப்...
‘சலார் 1 : சீஸ் ஃபயர்’ படத்தின் டீசரை வெளியானது!

‘சலார் 1 : சீஸ் ஃபயர்’ படத்தின் டீசரை வெளியானது!

News
சலார் 1 : சீஸ் ஃபயர் டீசர்: ஹோம்பாலே ஃபிலிம்ஸின் இந்திய திரைப்படத்தில் பிரபாஸுடன் ஒரு மறக்க இயலாத சாகச பயணத்திற்கு தயாராகுங்கள்..! *ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 'இந்தியன் ஃபிலிம்' சலார் பகுதி ஒன்று : சீஸ் ஃபயர் டீசரை வெளியிட்டது: பிரபாஸ் மற்றும் பிரசாந்த் நீல் ஆகியோருடன் இணைந்து ஒரு காவிய பயணத்திற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.* நீண்ட காத்திருப்புக்குப் பின் பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கிய 'இந்தியன் ஃபிலிம்' சலார் பகுதி-1 :சீஸ் ஃபயர் படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படத்தின் டீசர் அதிகாலை 5 12 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் அறிவிப்பு வெளியிட்டதன் மூலம் ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை படக்குழுவினர் தூண்டினர். மேலும் அனைவரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் புகழ்பெற்ற இயக்குநரான பிரசாந்த் நீல் உருவாக்கிய பரந்த பிரபஞ்சத்தின் பரபரப்பான செயல்பாடுகளின் காட...
வசூலில் சாதனை படைத்து வரும் ‘ஆதி புருஷ்’!

வசூலில் சாதனை படைத்து வரும் ‘ஆதி புருஷ்’!

News
வசூலில் சாதனை படைத்து வரும் 'ஆதி புருஷ்' பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் நடிப்பில் தயாரான 'ஆதி புருஷ்' திரைப்படம், வெளியான மூன்று நாட்களில் 340 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனையை படைத்திருக்கிறது. இதன் மூலம் நடிகர் பிரபாஸ் வசூலில் புதிய சாதனையை படைத்து பான் இந்திய சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கிறார். டீ சிரீஸ் பூஷன் குமார் & கிரிஷன்குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார், ரெட்ரோ ஃபைல்ஸ் ராஜேஷ் நாயர் ஆகியோர் தயாரிப்பில், பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி வெளியான திரைப்படம் 'ஆதி புருஷ்'. இதில் பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ், நூபுர் சனோன், சயீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் சாதனை படைத்து வருகிறது. வெளியான மூன்று தினங்களில்...
விளையாட்டு வீரர்களை வாழ்த்தும் பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸ்!

விளையாட்டு வீரர்களை வாழ்த்தும் பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸ்!

News
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 22 ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று, பதக்கங்களை வென்றெடுத்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பான் இந்திய சூப்பர் ஸ்டாரான நடிகர் பிரபாஸ் வாழ்த்துகளுடன் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்திருக்கிறார். 'பாகுபலி' படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமாகி, பான் இந்திய சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றவர் ' டார்லிங்' நடிகர் பிரபாஸ். சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வரும் இவரை கோடிக் கணக்கிலான பார்வையாளர்கள் பின் தொடர்கிறார்கள். சமூக முன்னேற்றம், சமூக நல்லிணக்கம், தேச பக்தி, தேசப்பற்று போன்ற விசயங்களில் தன்னுடைய முதன்மையான நேர்மறை விமர்சனத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் இவர், இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்ஹாம் எனும் இடத்தில் நடைபெறும் 70-க்கும் மேற்பட்ட காமன்வெல்த் நாடுகள் கலந்து கொண்ட 22 வது காமன்வெல்த் போட்டிகளி...