Tuesday, November 17

Tag: Prabhas goes snowboarding

பனி சறுக்கில் பரவசமூட்டும் பிரபாஸ்!

பனி சறுக்கில் பரவசமூட்டும் பிரபாஸ்!

News
ராதே ஷியாமின் புதிய பாடலான ‘ரேகைகள்’ போஸ்டரில் பனி சறுக்கில் பரவசமூட்டும் பிரபாஸ்~ யு வி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள காதல் ததும்பும் 'ராதே ஷியாம்' திரைப்படம் ஜனவரி 14 அன்று வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். ராதே ஷியாமில் இருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 'ஆகூழிலே' என்ற பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். 'தரையோடு தூரிகை' என்கிற மற்றொரு பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். இந்த இரண்டு பாடல்களும் ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. தற்போது மூன்றாவாது பாடலான ‘ரேகைகள்’-ன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இத்தாலியில் உள்ள கண்ணைக் கவரும் இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த பாடலில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை தெரிவிக்கும் வகையில...