பிரபாஸ் நடிக்கும் மும்மொழித் திரைப்படம்!
‘பாகுபலி’ நாயகன் பிரபாஸ் நடிக்கும் மும்மொழித் திரைப்படம்! வைஜயந்தி மூவிஸ் தயாரிப்பில் ‘நடிகையர் திலகம்’ புகழ் பிரபல இயக்குனர் நாக் அஷ்வின் இயக்குகிறார்
பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் உருவாகவிருக்கும் அடுத்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் மும்மொழித் திரைப்படமாக அமைகிறது. இப்படத்தை வைஜயந்தி மூவிஸ் தயாரிக்க, ‘நடிகையர் திலகம்’ தந்த பிரபல இயக்குனர் நாக் அஷ்வின் இயக்குகிறார்
'ரெபல் ஸ்டார்' பிரபாஸ் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பெரும் புகழ் சேர்த்த பாகுபலி திரைப்பட வரிசைகளின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து, ஒரு உண்மையான சர்வதேச திரை நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருக்கிறார் என்றார் அது மிகையில்லை.
திரையுலகில் ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலாக, வெற்றிமுகமாகவும் உத்வேகத்தோடும் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் முன்னணி நிறுவனமான வைஜயந்தி மூவிஸ், பல்வேறு மகத்தான வெற்றிப் படங்களைய...
