நடிக்க வரும் மாடல் பிரதைனி சர்வா!
எந்தவொரு மாடல் நடிகையும் பிறப்பிலேயே நடிகையாக இருப்பதில்லை, ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே மிகச்சிறந்த நடிகையாக மாறும் அதிர்ஷ்டம் கிடைக்கும். இத்தனை ஆண்டுகளில் அத்தகைய அரிதான மாடல் நடிகைகள் திரை வாழ்வில் சாதித்து, தங்கள் இடத்தை நிறுவுவதை நாம் பார்த்திருக்கிறோம். லென்ஸ், ஸ்பாட்லைட்ஸ் என புகழ் வெளிச்சத்திலேயே இருந்த, மிகவும் கொண்டாடப்பட்ட மாடல் பிரதைனி சர்வா, 'போதை ஏறி புத்தி மாறி' படத்தின் மூலம் நடிகையாக தனது பயணத்தை தொடங்குகிறார். தனித்துவமான கதை மற்றும் வலுவான கதாபாத்திரங்களை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் கே.ஆர். சந்துரு. ஏற்கனவே குறும்படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்ற தீரஜ் இந்த படத்தில் நடிக்கிறார்.
இந்த படம் குறித்து நாயகி பிரதைனி சர்வா கூறும்போது, "தனிப்பட்ட முறையில், திரைப்படங்களில் சில பெண் கதாபாத்திரங்களை நான் எப்போதும் கவனித்துக் கொண்டிருக்கிறேன். அவை பார்வையாளர்க...

