பல்வேறு விபத்துகள், கண்டங்கள் தாண்டி வரும் படம் ‘D3’!
நடிகர் பிரஜின் பிரதான நாயகனாக நடித்து ' D 3 'என்கிற சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் உருவாகியுள்ளது.இப்படத்தை பாலாஜி எழுதி இயக்கியுள்ளார். பீமாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் மனோஜ் எஸ் தயாரித்துள்ளார்.
இப்படத்துக்கு மணிகண்டன் பி.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார்.இவர் ஹன்சிகா மோத்வானி நடிப்பில் உருவாகும் 'மேன்' படத்தின் ஒளிப்பதிவாளர்.ஸ்ரீஜித் எடவானா இசையமைத்துள்ளார். இவர் இன்ஸ்டாகிராமில் புகழ்பெற்ற 'மனம் ஒரு கொதிகலனா?' பாடலுக்கு இசை அமைத்தவர்.கலை இயக்கம் - ஜெயசீலன் , ஸ்டண்ட் -ராம்போ விமல், படத்தொகுப்பு ராஜா ஆறுமுகம் .
இப்படம் இந்த மார்ச் 17ஆம் தேதி வெளியாக உள்ளது.
படம் பற்றி இயக்குநர் பாலாஜியிடம் கேட்டபோது,
"படத்தின் கதை என்னவென்றால் ,எந்த குற்றச் செயலைச் செய்பவனும் குற்றம் செய்த இடத்தில் ஏதாவது ஒரு தடயத்தை அவனை மீறி விட்டுச் செல்வான் என்பது பிரபஞ்ச உண்மை .அப்படி இந்தப் படத்தின் க...


