‘ஜெய் ஹனுமான்’ படத்தின் ப்ரீ லுக் போஸ்டர்!
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'ஜெய் ஹனுமான்' சீக்வலின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாக இருக்கும் நிலையில் ப்ரீ லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது!
'ஹனுமான்' படத்தின் அமோக வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பிரசாந்த் வர்மா, மிகவும் எதிர்பார்க்கப்படும் 'ஜெய் ஹனுமான்' படத்தைத் தொடங்க இருக்கிறார். அவரது பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸின் (பிவிசியு) ஒரு பகுதியான இந்தப் படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்டமாக படத்தைத் தயாரிக்க உள்ளது.
தற்போது வெளியாகியுள்ள ப்ரீ-லுக் போஸ்டர், பழங்காலக் கோவிலை நோக்கிச் செல்லும் ஹனுமானைக் கொண்டிருக்கும் காட்சிகள் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வசீகர...


