ஸ்ரீராமரின் ஆசி பெறுவதற்காக அயோத்தி சென்ற ‘ஹனு-மேன் படக்குழு!
ஸ்ரீராமரின் ஆசி பெறுவதற்காக அயோத்தி சென்ற ‘ஹனு-மேன் படக்குழு!
விரைவில் வெளியாகவிருக்கும் 'ஹனு-மேன்' படத்தின் டீசர் வெளியாகி பெரும் வெற்றி பெற்று வருவதால் உற்சாகமடைந்த இயக்குநர், நாயகன் உள்ளிட்ட படக் குழுவினர், அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்தனர்.
படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் அசல் இந்திய சூப்பர் ஹீரோ படைப்பு 'ஹனு-மேன்'. இதில் நடிகர் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் தயாராகி, வெளியாகவிருக்கும் முதல் பான் இந்திய திரைப்படம் இது. இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றது.
'ஹனு-மேன்' படத்தின் டீசருக்கு கிடைத்த ஆதரவால் மனம் மகிழ்ந்த பட குழுவினர், ஸ்ரீ ராமரின் ஆசீர்வாதத்தை பெறுவதற்காக அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் ஆலயத்திற்கு சென்றனர். அங்கு சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்...

