Tag: Preethi Nedumaran (Costume Designer
இரட்டை வேடங்களில் நயன்தாரா நடிக்கும் ‘ஐரா’
ஒவ்வொரு படத்திலும், நயன்தாராவின் நடிப்பிற்கு கிரேஸ் மற்றும் வரவேற்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அவர் நடிப்பில் அடுத்து வரும் படமான 'ஐரா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் மூலம் எதிர்பாராத எதிர்பார்ப்பு உண்டாகி இருக்கிறது. குறிப்பாக அவரது முதல் இரட்டை வேட படம் என்பதால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகம். இயற்கையாகவே, நேற்று மாலை வெளியான 'மேகதூதம்' சிங்கிள் பாடல் அதன் இசை மற்றும் உணர்ச்சி கூறுகளுக்காக அனைவருக்கும் பிடித்துப் போயிருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த ஐரா குழுவும் அதீத உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
இந்த பாடல் ஏன் 'பவானியின் கீதம்' என்று கூறப்படுகிறது என்பதை இயக்குனர் கே எம் சர்ஜூன் விளக்கும்போது, "இந்த பாடலை ஏற்கனவே கேட்டவர்கள் எளிதாக இதை கண்டுபிடித்திருப்பார்கள் என நம்புகிறேன். 'பவானி' என்ற கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்தும் பாடல். அவளுடைய கனவுகள், அபிலாஷைகள், ...

