சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட “எம்புரான்” பட டிரெய்லர் !
அதிரடி ஆக்சனில் மிரட்டும் “எம்புரான்” பட டிரெய்லர் !!*
முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் மற்றும் பிரித்திவிராஜின் இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருக்கும், பான் இந்தியப் படமான “எம்புரான்” படத்தின் அதிரடி டிரெய்லரை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சமூக வலைதளம் வழியே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இந்த டிரெய்லர் ஐமேகஸ் பதிப்பில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிரடி டிரெய்லரை வெளியிட்டுள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்... எனது அருமை நண்பர் மோகன்லால் மற்றும் பிரித்திவிராஜின் “எம்புரான்” பட டிரெய்லரை கண்டு ரசித்தேன், மிக அற்புதமான டிரெய்லர். படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற கடவுள் ஆசிர்வதிக்கட்டும், படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார். இந்த டிரெய்லர் இணையம் முழுக்க வைரலாக பரவி வருகிறது.
"எம்புரான்" டிரெய்லர், ரசிகர்களுக்கு அதிரடியான ஒரு விஷுவல் விருந்தாக அம...









