ஆக்ஷன் ரோலில் நடிக்க ஆசைப்படும் நடிகை பிரியா பிரகா குவாரியர்
"நடிப்புக்குத் தீனி போடும் கதைகள் நடிக்கவே விருப்பம்" - நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்!
'ஒரு அடார் லவ்' படம் மூலம் வைரல் ஆனவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். ஆனால் அவர் இப்போது அதைவிட வைரலான தருணத்தில் இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரது சினிமா வளர்ச்சி, ஆக்டிங் ஸ்டைல் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் பற்றி பகிர்ந்திருக்கிறார்.
நடிகர் அஜித்குமாரின் 'குட் பேட் அக்லி' படத்தில் அர்ஜூன் தாஸூடன் அவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. நடிகர் அஜித் மற்றும் அர்ஜூன் தாஸூடன் நடித்தது டபுள் தாமாக்கா என மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருப்பவர் ரசிகர்களின் அன்பிற்கு நெகிழ்ச்சியாக நன்றியும் தெரிவித்திருக்கிறார் பிரியா. அடுத்தடுத்தும் இதே போன்று வலுவான திறமையான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாகவும் அவர் கூறுகிறார். நடிப்புக்குத் தீனி போடும் விதமாக 'குட் பேட் அக்லி' படத்தில் அவரது நி...
