Sunday, September 6

Tag: Producer – Director KR

சினிமா தலைப்புகளை TV சீரியல்களுக்கு பயன்படுத்துவது குறித்து தயாரிப்பாளர் கேயார் கண்டணம்!

சினிமா தலைப்புகளை TV சீரியல்களுக்கு பயன்படுத்துவது குறித்து தயாரிப்பாளர் கேயார் கண்டணம்!

News
சினிமா தலைப்புகளை TV சீரியல்களுக்கு பயன்படுத்துவது குறித்து தயாரிப்பாளர், இயக்குனர் கேயார் அறிக்கை சினிமா தலைப்புகள் TV Serial-களில் பயன்படுத்துவது சரியா? தயாரிப்பாளர், இயக்குனர் கேயார் கண்டனம்... TV தொடர்களால் சினிமா ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. சமீப காலமாக TV தொடர்களில், அனுமதியில்லாமல் சினிமா தலைப்புகளை பயன்தடுத்துவதும் ஒரு வாடிக்கையாகிவிட்டது. ஒரு திரைப்படத்திற்கு தலைப்பு என்பது மிக முக்கியமானது. பல நாட்கள் சிந்தனை செய்து, பல தலைப்புக்கள் தேர்ந்தெடுத்து, அதில் ஒரு புதிய தலைப்பை முடிவு செய்து, கடைசியில் அந்தந்த சங்கங்களில் பதிவு செய்வதென்பது நடைமுறையில் உள்ள ஒரு விஷயம். ஒருவேளை, தெரிந்தெடுக்கும் தலைப்பு வேறொரு தயாரிப்பாளர் பதிவு செய்திருந்தாலும் அல்லது அந்த தலைப்பில் வேறொரு தயாரிப்பாளர் படத்தை வெளியிட்டிருந்தாலும், நமக்கு அந்த தலைப்பு வேண்டுமென்றாலும்...