வெற்றிப்பட இயக்குநர் வெற்றி மாறனுடன் இணையும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்!
விமர்சன ரீதியிலான வரவேற்பும், வர்த்தக ரீதியிலான வெற்றியும் எப்போதாவதுதான் ஒரு படத்தில் இணையும். விமர்சகர்களையும், வெகுஜன ரசிகர்களையும் திருப்திப்படுத்துவது என்பது ஒரு திரைப்படத்துக்கு கடினமான செயல்தான். வர்த்தகமும் வித்தகமும் ஒன்றிணைவது அவ்வளவு எளிதானதல்ல. வணிக ரீதியில் வெற்றி பெற்ற தயாரிப்பாளர் ஒருவரும், விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இயக்குநர் ஒருவரும் முதல் முறையாக ஒன்றாக இணைகிறார்கள். ஆம்... தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றி மாறனும், வணிக ரீதியில் வெற்றிப் படங்களைக் கொடுக்கும் தயாரிப்பாளர் எல்ரெட் குமாரும் முதல் முறையாக ஒன்றிணைகிறார்கள்.
சமீபத்தில் வெளியாகி வணிக ரீதியிலும் விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்ற 'அசுரன்' படத்தை இயக்கிய வெற்றி மாறன், வர்த்தக ரீதியில் வெற்றி பெற்ற பல படங்களைத் தயாரித்த எல்ரெட் குமார் ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்...
