300 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகும் சல்மான் கானின் தபாங் 3!
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளான தபாங் 3 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, சல்மான் கானின் அதிதீவிர ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான சினிமா ரசிகர்கள் அனைவரிடமும் பரபரப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது. கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் உருவாக்கிய இப்படத்தின் போஸ்டர்கள், ரசிகர்கள் எந்த அளவுக்கு இப்படம் குறித்து அதீத ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பதை தெளிவாகப் புரிய வைத்தது.
தற்போது வெளியாகியிருக்கும் தபாங் 3 படத்தின் அதிகாரபூர்வமான போஸ்டர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்திருக்கறது என்றால் மிகையாகாது. போக்கிரி தமிழ்ப் படத்தின் இந்திப் பதிப்பான வாண்டட் படத்தின் மூலம் முதல் முறையாக இணைந்த சல்மான் கானும் பிரபுதேவாவும் இப்போது தபாங் 3 படத்தில் இணைந்திருப்பது, ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏகத்துக்கு எகிற வைத்திருக்கிறது. வாண்ட்டட் படத்தைக் காட்டிலும் ப...
