“கார்த்திக்கு எனக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரி எல்லோராலும் பேசப்படும்” – நடிகை த்ரிஷா
பொன்னியின் செல்வன் கீதம் உருவாக்கியதில் எந்த பின்னணியும் இல்லை...
மணி ரத்னம் சார் விரும்பியதால் உருவானது - இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்
சுபாஸ்கரன் வழங்கும் லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும், இயக்குநர் மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் - 2 கீதம் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (15.04.2023) நடைபெற்றது.
தமிழ் சினிமாவின் மிகப்பெரும் காவியமான பொன்னியின் செல்வன் 2, ஏப்ரல் 28, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகி, திரையுலக பிரியர்களுக்கு பரவசமான சினிமா அனுபவத்தை வழங்க தயாராக உள்ளது.
அகாடமி விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஆல்பத்தின் பாடல்கள் இசை ஆர்வலர்களிடமிருந்து அமோக வரவேற்பைப் பெற்ற நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் 6000 மாணவர்களிடையே பிஎஸ் 2 கீதத்தை வெளியிட ஒட்டுமொத்த குழுவும் வந்திருந்தது. அதில் பேசியதாவது,
நடிகர் விக்ரம் பேசும்போது,
"இவ்வளவு கூ...
