பிக்பாஸ் சாக்ஷி நடிக்கும் ‘புரவி’!
பிளாக் பீப்பிள் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஜி ஜே சத்யா இயக்கத்தில், பிக்பாஸ் சாக்ஷி நடிப்பில் வரவிருக்கும் அதிரடி-அரசியல்-திரில்லர் ‘புரவி’
பிளாக் பீப்பிள் பிக்சர்ஸ் சார்பாக S.சுமதி தயாரிப்பில், ஜி ஜே சத்யா இயக்கத்தில், பிக்பாஸ் சாக்ஷி நடிப்பில் பெண்களை மையமாகக் கொண்டு வரவிருக்கும் அதிரடி-அரசியல்-திரில்லர் ‘புரவி’ திரைப்படத்தின் துவக்க விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
‘களிறு’ திரைப்படத்தை தொடர்ந்து, இன்றைய சமூகத்தில், வேகத்திற்கு இணையாக விவேகம் முன்னெடுக்கப்படாத நிலையில், பெண்களுக்கு எதிரான அநீதிகளும், குற்றங்களும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. ஒரு
பெண்ணின் பார்வையில் இந்த நிகழ்வுகளை, கிரைம்-அரசியல்-திரில்லர் என ஒரு அதிரடி திரைப்படத்தை அனைவரும் ரசிக்கத்தக்க வகையில், படைக்கவிருக்கிறார் இயக்குனர் சத்யா.
இப்படத்தில் முக்கிய வேடத்தில் ‘பிக்பாஸ்’ புகழ் சாக்ஷி நடிக்க, அவரோடு இணைந்து சம்பத்ர...
